த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்குப் பிறகு நடிகர் ஜி.வி. பிரகாஷும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரை வந்துவிட்ட நிலையில், படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளன.
காதலை தேடி நித்யா நந்தா என இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. கதாநாயகனாக நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றி வருகிறார் ஜி.வி. பிரகாஷ். அனேகன் படத்தில் நடித்த அம்ரியா தஸ்துர் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, விடிவி கணேஷ், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தின் தலைப்பில் நித்யா நந்தா என்று வருவதால் நித்யானந்தா சர்ச்சைகள் குறித்து படத்தில் காட்சிகள் வருகிறதா என்கிற கேள்விக்கு ஒரு பேட்டியில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது: தலைப்பை வைத்து கற்பனைக்குதிரையைத் தட்டிவிடவேண்டாம். இப்படத்துக்கும் நித்யானந்தாவுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. படத்தில் வருகிற காதல் ஜோடிகளின் பெயர்கள் நித்யா, நந்தா. அவ்வளவுதான். சமகால உறவுகள் குறித்தும் தன் உண்மையான காதலை நிரூபிக்கக் காதலன் எவ்வளவு தூரம் செல்கிறான் என்பதையும் படத்தில் விளக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திண்டுக்கல் சீனிவாசன்

கம்பம் தொகுதியில் தவெக உள்பட 7 போ் வேட்புமனுத் தாக்கல்

பேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா? ப. சிதம்பரம் கண்டனம்

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


