இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன.
செப்டம்பர் 21 அன்று ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சாமி 2 (சாமி ஸ்கொயர்), ராஜா ரங்குஸ்கி, ஏகாந்தம், மேடை என நான்குப் படங்கள் வெளிவருகின்றன.
கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடிப்பில் தரணிதரன் இயக்கியுள்ள படம் - ராஜா ரங்குஸ்கி. இசை - யுவன் ஷங்கர் ராஜா.
இவை தவிர ஏகாந்தம், மேடை ஆகிய மேலும் இரு படங்கள் என இந்த வாரம் 4 தமிழ்ப்படங்கள் வெளிவருகின்றன.
இந்த நான்குப் படங்களில் சாமி 2 படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவருகிறது. சாமி படத்தின் வெற்றிக்கு அதன் இரண்டாம் பாகம் ஈடுகொடுக்குமா என்பது வரும் நாள்களில் தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திண்டுக்கல் சீனிவாசன்

கம்பம் தொகுதியில் தவெக உள்பட 7 போ் வேட்புமனுத் தாக்கல்

பேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா? ப. சிதம்பரம் கண்டனம்

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


