48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அம்மன் வேடத்தில் பிக் பாஸ் ஜூலி: டீசர் வெளியானது!

அம்மன் சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் அதற்கான விரதங்கள் இருந்து நடித்துக் கொடுத்தார்...

News image
Updated On :19 செப்டம்பர் 2018, 12:21 pm

ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக்பாஸ் என பிரபலமானவர் ஜூலி. தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் இவர், "அம்மன் தாயி' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கேசவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. அன்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

இரட்டை இயக்குநர்கள் வரிசையில் மகேஸ்வரன் - சந்திரஹாசன் இருவரும் இணைந்து இப்படத்தை எழுதி இயக்குகின்றனர். 

இயக்குநர்கள் இப்படம் பற்றி கூறியதாவது: ஜூலி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார். பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ஆச்சர்யம் கொண்டு இதில் நடித்தார். அம்மன் சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் அதற்கான விரதங்கள் இருந்து நடித்துக் கொடுத்தார். அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை வதம் செய்யும் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவும் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு தான் நடித்துள்ளார்'' என்று கூறியுள்ளார்கள். 

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.