48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நடிகை நிலானி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை ஆலப்பாக்கத்தில் வசித்து வந்த நிலானி, இன்று திடீரென பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை முயற்சி...

News image
Updated On :20 செப்டம்பர் 2018, 12:30 pm

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையை அவதூறாக விமர்சித்ததாக கைதானார் சின்னத்திரை நடிகை நிலானி. காவல்துறையினர், நிலானி மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 4 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை நிலானிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியைக் காதலித்து வந்தார். பிறகு கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்தார்கள். எனினும் தன்னைத் திருமணம் செய்யுமாறு காந்தி, நிலானியை வற்புறுத்தியதால் இதை எதிர்த்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இரு நாள்கள் கழித்து, சென்னை கேகே நகரில், தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார் காந்தி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காந்தி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்த நிலானி, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது: இரண்டு நாள்களுக்கு முன்பு காந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பிறகு அவர் தற்கொலை செய்துகொண்டார். ஊடகங்களில் நான் தலைமறைவு என்றும் எனக்கும் காந்திக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் விடியோவுடன் செய்தி வெளியிடுகிறார்கள். அந்த விடியோவின் உண்மைத்தன்மை தெரியாமல் இதுபோன்ற செய்தி வெளியிடுவதை உடனே நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டார். 

சென்னை ஆலப்பாக்கத்தில் வசித்து வந்த நிலானி, இன்று திடீரென பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். பிறகு, வீட்டில் மயங்கிக் கிடந்த நிலானி, காவல்துறையின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.