சூர்யா, விஜய் இணைந்து நடிக்கவிருக்கும் புத்தம் புதிய திரைப்படம்!

சூர்யா, விஜய் இருவரும் தத்தமது திரைப்படங்களை முடித்ததும் அடுத்த சில மாதங்களில் சுதா கோங்கராவின் திரைப்படத்தில் இணைந்து நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.
சூர்யா, விஜய் இணைந்து நடிக்கவிருக்கும் புத்தம் புதிய திரைப்படம்!
Updated on
1 min read

சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK' திரைப்படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களுமே தமிழ், தெலுங்கு என இருமொழித் திரைப்படங்களாக உருவாகி வருகின்றன. கே.வி ஆனந்த் திரைப்படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், சமுத்திரக் கனி, பாலிவுட் குணச்சித்திர நடிகரான பொமன் இரானி, சாயேஷ உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். 

இந்த இரு திரைப்படங்களும் முடிந்த பின்னர் சூர்யா அடுத்ததாக ‘இறுதிச் சுற்று’ திரைப்படப் புகழ் இயக்குனர் சுதா கோங்கராவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல். 2019 ஆம் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா இணைந்து நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இரட்டை நாயகர்களின் கதையான இத்திரைப்படத்தில் மற்றொரு நாயகனாக விஜய் தேவரகொண்டா நேரடி தமிழ்த்திரைப்படத்தில் அறிமுகமாகவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

விஜய் தேவரகொண்டா தற்போது தனது புதிய திரைப்படமான NOTA வில் பிஸியாக இருப்பதால் சூர்யா, விஜய் தேவரகொண்டா இருவரும் தத்தமது திரைப்படங்களை முடித்ததும் அடுத்த சில மாதங்களில் சுதா கோங்கராவின் திரைப்படத்தில் இணைந்து நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம். இத்திரைப்படத்தை தயாரிக்கவிருப்பது சூர்யா, கார்த்தியின் உறவினரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com