இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

துரை இயக்கத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இஸட். துரை இயக்கும் இருட்டு என்கிற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் சுந்தர்.சி... 

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 7:15 am

2016-ம் ஆண்டில் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா ஆகிய படங்களில் நடித்த சுந்தர்.சி அதற்குப் பிறகு இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களை இயக்கிய சுந்தர்.சி, அடுத்ததாக சிம்பு மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கும் இரு படங்களை இயக்கவுள்ளார். சிம்பு நடிக்கும் படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும். அதன்பிறகு விஷால் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளார் சுந்தர்.சி.

இந்நிலையில் வி.இஸட். துரை இயக்கும் இருட்டு என்கிற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் சுந்தர்.சி. இப்படத்துக்கு இசை - ஹிப்ஹாப் தமிழா. த்ரில்லர் வகைமைப் படமாக அமையவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.