லைகா நிறுவனத்திலிருந்து விலகி ரஜினி கட்சியில் இணைந்தார் ராஜு மகாலிங்கம்!

லைகா திரைப்பட நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இணைந்துள்ளார் ராஜு மகாலிங்கம்...
லைகா நிறுவனத்திலிருந்து விலகி ரஜினி கட்சியில் இணைந்தார் ராஜு மகாலிங்கம்!

லைகா திரைப்பட நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இணைந்துள்ளார் ராஜு மகாலிங்கம்.

லைகா திரைப்பட நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட் பொறுப்பில் இருந்த ராஜு மகாலிங்கம், ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்தார். படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார். 

இந்நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார் ராஜு மகாலிங்கம். இதுகுறித்து அவர் கூறியதாவது: 2.0 படப்பிடிப்பின்போது ரஜினியை நெருக்கமாகக் கவனித்தேன். அவரது கடமையுணர்வு, நேர்மை போன்ற குணங்களால் ஈர்க்கப்பட்டு விரைவில் தொடங்கவுள்ள கட்சியில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். தற்போது எந்தப் பொறுப்பிலும் நான் இல்லை. ஓர் உறுப்பினராக மட்டுமே உள்ளேன் என்றார். 

ரஜினி ஆரம்பிக்கவுள்ள கட்சியில் யார் யாரெல்லாம் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல் நபராக அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் ராஜு மகாலிங்கம். 

ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். மேலும், வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com