ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் மு.க. அழகிரி!

ரஜினி தனது அரசியல் முடிவைத் தெரிவிப்பதற்கு முன்பாகவே, அவரது அரசியல் பிரவேஷத்தை வரவேற்றவர்களுள் மு.க அழகிரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் மு.க. அழகிரி!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி நேற்று தன் தன் தந்தையைச் சந்தித்துப் பேச கோபாலபுரம் வந்து சென்றார். தந்தையைச் சந்தித்த பிறகு ஊடகத்தினரைச் சந்தித்த மு.க அழகிரி, தந்தைக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசி பெற்றுச் செல்ல வந்ததாகவும், தனது தந்தை தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தகவல் அளித்தார். அப்போது அவரிடம், ரஜினியின் அரசியல் பிரவேஷம் பற்றியும் கேள்வி எழுப்பப் பட்டது.

அதற்கு பதிலளித்த மு.க அழகிரி, ரஜினியின் அரசியல் பிரவேஷத்தைத் தான் வரவேற்பதாகவும், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற அனுமதி கேட்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்ததும் விரைவில் ரஜினியைச் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஜினி தனது அரசியல் முடிவைத் தெரிவிப்பதற்கு முன்பாகவே, அவரது அரசியல் பிரவேஷத்தை வரவேற்றவர்களுள் மு.க அழகிரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழ்நிலையில் அழகிரி, ரஜினியை நேரில் சந்தித்துப் பேச அனுமதி கேட்டிருப்பது அரசியல் ஆதரவு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடுமா என்ற எதிர்பார்ப்பை அவர்கள் இருவரது ஆதரவாளர்களிடையே எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com