நடித்தால் தான் சினிமாவில் இருப்பதாக அர்த்தமா? நான் உங்களில் ஒருவன்! 'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல் நெகிழ்ச்சி!

பிக் பாஸ் 2 நேற்று (ஜூலை 1) வித்யாசமான நிகழ்ச்சியாக பார்வையாளர்களுக்கு
நடித்தால் தான் சினிமாவில் இருப்பதாக அர்த்தமா? நான் உங்களில் ஒருவன்! 'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல் நெகிழ்ச்சி!

பிக் பாஸ் 2 நேற்று (ஜூலை 1) வித்யாசமான நிகழ்ச்சியாக பார்வையாளர்களுக்கு அமைந்தது. காரணம் காரசாரமான பஞ்சாயத்துகள் முடிவுக்கு வந்ததும், விஸ்வரூபம் 2 திரைப்பட பாடல் அரங்கேற்றம் நடந்ததும் எனலாம். இசை அமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசனின் வருகை என கொண்டாட்டமாகவே இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. 

எல்லாவற்றையும் விட கமலிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூர்மையாக அளித்த பதில்கள் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. பார்வையாளர்களில் ஒருவர் கமலிடம் சினிமாவை விட்டு விலகாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்க, அதற்கு கமல் `நான் சினிமாவில் நடித்திருக்காவிட்டால் அந்தப் பக்கம் உங்களில் ஒருவனாக, ரசிகனாக இருந்திருப்பேன். எந்தப் பக்கம் இருந்தாலும் சினிமாவை விட்டெல்லாம் போகமாட்டேன். நடித்தால் தான் சினிமா என்பது இல்லை, உங்களில் ஒருவனாக இருந்து சினிமாவைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்.’ என்றார். முத்தாய்ப்பாக அதைவிடவும் பெரிய பணியொன்றில் ஈடுபடப் போகிறேன் என்றும் மீண்டும் நடிக்கச் சொல்லி சலனப்படுத்திவிடாதீர்கள் என்றும் கூறினார்.

ஒரு விளம்பர இடைவேளைக்கு பின்பு கமல் போட்டியாளர்களுக்கு, குறிப்பாக பெண் போட்டியாளர்களுக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்தினார். சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் சூழ்ந்துள்ள பிக் பாஸ் வீட்டில் குளியலறைகளில் மட்டும் நிச்சயம் கேமரா இருக்காது, அது குறித்த அச்சமோ சந்தேகமோ யாருக்கும் வேண்டாம் என்பதுதான் அது. ஷூட்டிங் சமயத்தில் ஒரு வேட்டி மறைப்பில் கூட நடிகைகள் உடை மாற்றுவார்கள். நாங்கள் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. 18 வயதில் பார்க்காத கமலுக்கு 62 வயதில் பார்க்க வேண்டும் என்பதில்லை. தவிர சானல் டிஆர்பி ஏத்திக்கணும்னு அவங்களுக்கும் அவசியம் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களோடு நானும் தொடர்பு வைத்திருக்க மாட்டேன். அதைச் செய்ய நாங்கள் இங்கு வரவில்லை என்று கூறி போட்டியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். பலத்த கரகோஷம் பார்வையாளர்களிடமிருந்தும் போட்டியாளர்களிடமிருந்தும் எழுந்தது.

ரசிகர்கள் எலிமினேட் செய்த மகதியிடன் பேசும் போது தேவர் மகன் படத்தின் போது ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். முதல் ஏழு நாள் முடிந்துவிட்டது. நீண்ட காலம் கழித்து மீண்டும் நடிக்க வந்த நடிகர் திலகம் சிவாஜி, கமலிடம் இந்த ஏழு நாள் காட்சிகளை மீண்டும் எடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டுள்ளார். மீடியாவிலே இருந்த மகதி சற்று இடைவெளிக்கு பிறகு மீண்டும் மீடியாவின் முன் வரும்போது எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை அதற்கான காரணம் என்னவென்று கேட்டுவிட்டு, அதற்கு தனது தரப்பு அறிவுரையாக எந்தப் பயிற்சியையும் திறமையையும் நாம் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தத் திறமை துருப்பிடித்து விடும்.  மமதியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். 

நிகழ்ச்சியின் இறுதியில் கமல் கூறுகையில், 'பிக் பாஸ் வீட்டின் குணாதிசயம் ஒன்று உள்ளது. அது வீட்டின் உறுப்பினர்கள் குறையக் குறைய சுவாரஸ்யங்கள் அதிகரிக்கும், சண்டையும் கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறி விடைபெற்றார் கமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com