தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

சிரஞ்சீவியின் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ யில் காலாவின் காதலி!

சிரஞ்சீவியின் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் ஆந்திராவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் எனக் கருதப்படும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கைக் கதை எனக்கூறப்படுகிறது

Updated On :

சிரஞ்சீவியின் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் ஆந்திராவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் எனக் கருதப்படும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கைக் கதை எனக்கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் முன்னதாக தமனா மற்றும் நயன் தாரா என இரு நாயகிகள் இருக்கையில் தற்போது காலா திரைப்படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்த ஹூமா குரேஸியும் முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என டோலிவுட் பட்சி கூறுகிறது. இத்திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்கும் நடிகர்களைத் தவிர அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, கிச்சா சுதீப், பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பிரபலங்களும் குணச்சித்திர வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஹூமா குரேஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவராததால் அவர் இந்தத் திரைப்படத்தை ஒப்புக் கொண்டாரா, இல்லையா? என்பது குறித்து தகவல்கள் இல்லை.

Related Article

‘பிக் பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா நடித்த படத்தின் டிரெய்லர்!

பிளாஸ்டிக்குக்கு தடை கோருகிறார்களே, அதில் ஆணுறையும் அடங்குமா? நடிகை பூனம் பாண்டே!

உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகையிடம் பறிக்கப்பட்ட செல்போன்

ஆதரவின்றித் தவிக்கும் மூத்த நடிகர்கள்: நடிகர் கார்த்தி கவலை!

லண்டனில் தொடங்குகிறது சூர்யா - கே.வி. ஆனந்த் படம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.