கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நடிகர் அக்‌ஷய் குமாரின் டெலிட்டட் ட்விட்!

ட்விட்டரில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அக்‌ஷய் குமாரின் டெலிட் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவு இது தான்... இதை ஏன் மெனக்கெட்டு டெலிட் செய்ய வேண்டும்?
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நடிகர் அக்‌ஷய் குமாரின் டெலிட்டட் ட்விட்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 2012 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் விலை உயர்வின் போது ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வலிமையாகப் பதிவு செய்திருந்தார். எப்படி என்றால், 

‘நண்பர்களே! உங்களை சைக்கிள்களைத் தூசி தட்டி வெளியில் எடுத்துச் சாலைகளில் விடுங்கள். அதிகாரப்பூர்வத் தகவல்களின் படி மீண்டுமொரு பெட்ரோல் விலை உயர்வுச் செய்தியொன்று பொதுமக்களைத் தாக்கவிருக்கிறது.’

- என்பதே அவரது ட்விட்டர் தகவல். இதை அவர் வெளியிட்டது 2012 ஆம் ஆண்டில். காங்கிரஸ் ஆட்சி மாறி தற்போது பாஜக தனது ஆட்சியின் இறுதிநிலையில் இருக்கிறது. மீண்டும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு 2019 ஆப்ரல் மே மாதங்களில் நடக்கவிருக்கும் சூழலில் அப்போது ஜெயித்து அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யாரோ? ஆனால், அதற்குள்ளாக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட போதெல்லாம் தொடர்ந்து கடுமையாகத் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்து வந்த பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அனுபம் கெர், அசோக் பண்டிட், விவேக் அக்னி ஹோத்ரி உள்ளிட்ட பலர் இப்போது எங்கே சென்று விட்டார்கள்?.

இதோ பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே தான் இருக்கிறது. இதை கண்டித்து அவர்கள் ஏன் இப்போது சுத்தமாக வாயே திறப்பதில்லை. எங்கே போய்விட்டார்கள் அவர்கள்? தங்களது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை இந்த மெளனத்தின் மூலமாக அவர்கள் அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்களா? என சுப்ரமணியன் சுவாமி முதல் சாமானிய ரசிகர்கள் வரை அனைவரும் அவர்களை நோக்கி ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருவது சமீபத்தில் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது.

சுப்ரமணியன் சுவாமியின் ட்விட்...

இந்த விவகாரத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்த்துதல் நடவடிக்கையை விமர்சித்து தான் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவொன்றை தற்போது நீக்கியிருக்கிறார். அப்போத் கேள்வி கேட்டவர் ஏன் இப்போது கேள்வி கேட்கவில்லை? அதோடு சர்ச்சைக்குரிய அந்த ட்விட்டர் பதிவை நீக்கியுமிருக்கிறார். எதற்காக நடிகர்களுக்கு இந்த இரட்டை வேடம். தாங்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சி மத்திய அரசுக்கு தலைமை ஏற்றால் அப்போது எங்கே போய் விடுகிறது இவர்களது பொதுநல மனப்பான்மையும்? அரசின் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பி விமர்சிக்கும் உரிமையும்?! என்று ட்விட்டரில் தொடர்ந்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com