கேன்ஸ் திரைவிழாவில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி! உணர்ச்சி வசப்பட்டார் நடிகர் தனுஷ்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 13 உயிர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 
கேன்ஸ் திரைவிழாவில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி! உணர்ச்சி வசப்பட்டார் நடிகர் தனுஷ்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 13 உயிர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், தனது ஆதங்கத்தை நடிகர் தனுஷ் அண்மையில் தான் பங்குபெற்ற கேன்ஸ் திரை விழாவில் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் நற்பணி மற்ற நிர்வாகி ஒருவரும் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்ததாவது: துப்பாக்கிச் சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பியின் குடும்பத்தினரைச் சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தனுஷ் கூறியிருப்பது, ‘ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.’ ஸ்டெர்லைட் பிரச்னை குறித்து பாரிஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.

தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் பாகீர்' (The Extraordinary journey of Fakir) என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பிரெஞ்சு நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard', படத்தின் திரையாக்கம் தான் இப்படம். இதில் பிரதான பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ‎Uma Thurman‬ மற்றும் ‎Alexandra Daddario
 போன்றோரும் நடித்துள்ளார்கள்.

 கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் தனுஷ், பட இயக்குநர் கென் ஸ்காட் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் தனுஷ் பேசும் போது, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது இறந்த 13 பேருக்காக சிறிது நேரம் கண்களை மூடி மௌன அஞ்சலி செலுத்தும்படி கூட்டத்தினரை வேண்டிக் கொண்டார். மிகவும் கொந்தளிப்பான மன நிலையில் காணப்பட்டார் தனுஷ்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்கி அரங்கில் இருந்த அனைவரும் கண்களை மூடி மௌன அஞ்சலி செலுத்தினர். இந்தக் காட்சியை விடியோவாகி பதிவு செய்த அவரது ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியுடன் காணொலியையும் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com