
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று ரிலீஸாகவிருக்கிறது.
இதில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலா படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் என்பது அதன் தணிக்கைச் சான்றிதழ் வழியாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் காலா படத்தின் வெளியீடு சில தினங்கள் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது. ஆனால் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், காலா படம் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என்பதை அண்மையில் உறுதி செய்துள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள ஹூமா குரேஷி தனது ட்விட்டரில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.
இது அவரது ரசிகர்களிடைய பாராட்டுக்களையும் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துவிட்டது.
Can't wait to share this beautiful film with you all ... #Kaala releases #June7th #KaalaInHindi Seen here with the #KingOfDharavi @rajinikanth @beemji #actorslife #humaqureshi #blessed #work #love #intense pic.twitter.com/PNTLlgw8mZ
— Huma Qureshi (@humasqureshi) May 25, 2018
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...