நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை: படப்பிடிப்பு நிறைவு!

நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

News image
Updated On :3 ஏப்ரல் 2019, 5:05 am

எழில்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் படம் உருவாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. 

இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து அடுத்த நான்கு மாதங்கள் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடைபெறவுள்ளன. நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.