ஏஞ்சலினா ஜோலியுடன் இணையும் எக்ஸ் மேன் ஸ்டார் நிக்கோலஸ் ஹால்ட்!

இந்தத் திரைப்படம் மைக்கேல் கோரிட்டாவின் நாவல் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல். பயங்கரமான கொலைச்சம்பவம் ஒன்றை நேரில் பார்த்து விடும் 14 வயதுப் பையனை ஒரு தீவிபத்திலிருந்து காப்பாற்றுகிறார் 
ஏஞ்சலினா ஜோலியுடன் இணையும் எக்ஸ் மேன் ஸ்டார் நிக்கோலஸ் ஹால்ட்!
Published on
Updated on
1 min read

எக்ஸ் மேன் ஸ்டார் நிக்கோலஸ் ஹால்ட், ஏஞ்சலினா ஜோலியின் “தோஸ் ஹூ விஷ் மீ டெட்’( Those Who Wish Me Dead) திரைப்படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் இவர்களுடன் இன்னமும் பெயரறிவிக்கப்படாத பாத்திரம் ஒன்றில் டெய்லர் பெர்ரியும் இணையவிருக்கிறார். படத்தின் இயக்குனர்டெய்லர் ஷெரிடன்.

இந்தத் திரைப்படம் மைக்கேல் கோரிட்டாவின் நாவல் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல். பயங்கரமான கொலைச்சம்பவம் ஒன்றை நேரில் பார்த்து விடும் 14 வயதுப் பையனை ஒரு தீவிபத்திலிருந்து காப்பாற்றுகிறார் ஏஞ்சலினா ஜோலி. அந்தப் பையன் யார் என்றால்? அவன் ஒரு பயங்கரமான கொலைச்சம்பவம் ஒன்றை நேரில் கண்ட ஒற்றை சாட்சி. கொலைகாரர்கள் இரண்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஒருவராக நடிக்கத்தான் நிக்கோலஸ் தேர்வாகியிருப்பதாக வதந்தி.

கொலைகாரர்களின் பிடியிலிருந்து சிறுவன் தப்புவானா? அதற்காக அவன் கையாளும் யுக்திகள் என்ன? இதில் ஏஞ்சலினா சிறுவனுக்கு எவ்விதத்தில் உதவுகிறார்? இப்படிச் செல்லவிருக்கிறது திரைப்படம். சிறுவனாக நடிக்கவிருப்பது ஆஸ்திரேலிய குழந்தை நட்சத்திரமான ஃபின் லிட்டில்.

நிக்கோலஸ் ஹால்ட் சமீபத்தில் ஆஸ்கர் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘தி ஃபேவரிட்’ (The Favourite) ல் நடித்திருந்தார். அடுத்ததாக லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் திரைக்கதையின் ஆசிரியர் J R R Tolkien வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படவிருக்கும் பயோபிக்கில் டோக்கியனாக நடிக்கவிருக்கிறாராம். முன்னதாக நிக்கோலஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எக்ஸ் மேன் திரைப்படத்தின் பீஸ்ட் கதாபாத்திரம், டார்க் ஃபோனிக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நிக்கோலஸை நாம் காணலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com