'இந்தியன் 2' படத்தில் நடிக்கும் 4 கதாநாயகிகள் இவர்கள்தான்!

'இந்தியன் 2' படத்தில் நடிக்கும் 4 கதாநாயகிகள் இவர்கள்தான்!

"இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது.
Published on

'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். இதில் ஒரு கமல்ஹாசன் தான். வயதான தோற்றத்தில் நடிக்கிறார். அவரது பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் இந்த படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். முதல் பாகத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா என 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இதில் சித்தார்த் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த மாதம் வெளிநாடுகளில் சில காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். 

**

திருமணத்துக்குப் பின்பு பெரும்பாலான பெண்கள் தங்களது அழகைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.  ஆனால்  40 வயதைக் கடந்தாலும் உடற்கட்டைப் பராமரிக்கும் நடிகைகள் இருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டுவரை கிரிக்கெட் வர்ணனையில் ஆண்கள்தான் கொடிகட்டிப் பறந்தனர். 2003 மற்றும் 2007-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார் மந்த்ரா பேடி. திரைப்பட நடிகையான இவர் வர்ணனை செய்யும் போது படுகவர்ச்சியான உடைகளில் தோன்றி இளவட்டங்கள் முதல் பெரிசுகள் வரை கவர்ந்திழுத்தார். சமீபகாலமாக நடிகைகள் சுற்றுலாப் பயணமாக மாலத்தீவுக்குப் பறந்துவிடுகின்றனர். நீச்சல் உடை அணிந்து தங்கள் இஷ்டத்துக்கு கடலில் நீந்தி மகிழ்கின்றனர்.  மந்த்ராபேடி அங்குள்ள மரமொன்றில் ஒயிலாகச் சாய்ந்து நின்றபடி சன் பாத் எடுக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார். சூரிய ஒளிக்கீற்றுடனும், நீல கடலுடனும் என்னுடைய நாளை இன்று நல்லமுறையில் கழித்துள்ளேன். இதைவிட ஒரு சந்தோஷமான இடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார் மந்த்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com