சாஹோ படத்தால் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் ரூ. 150 கோடியில் உருவாகியுள்ள சாஹோ படம் ஆகஸ்ட் 30 அன்று வெளிவருவதாக அறிவிப்பு வெளியானது...


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். ஆகஸ்ட் 30 அன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் ரூ. 150 கோடியில் உருவாகியுள்ள சாஹோ படம் ஆகஸ்ட் 30 அன்று வெளிவருவதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் காப்பான் பட வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 அன்று காப்பான் படம் வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...