வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இந்தியன் 2 படத்துக்கு ஒளிப்பதிவு - ரத்னவேலு!

கமல்- ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்...

News image
Updated On :15 ஆகஸ்ட் 2019, 5:14 am

எழில்

கமல்- ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சுதந்திரத் தினமான இன்று படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் பெயர் இடம்பெற்றுள்ளது. முதலில் வெளியிடப்பட்ட போஸ்டரில் ஒளிப்பதிவாளராக ரவி வர்மனின் பெயர் இடம்பெற்றது. ஆனால் அவர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிய உள்ளதால் அவருக்குப் பதிலாக இந்தியன் 2 படத்தில் ரத்னவேலு இடம்பெற்றுள்ளார். 

சேது, நந்தா, பகவதி, ஜெயம், திருமலை, பேரழகன், மாயாவி, வாரணம் ஆயிரம், எந்திரன், லிங்கா போன்ற தமிழ்ப் படங்களுக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.