கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

நம்பர் 1 ட்ரெண்டிங்கில் ஜேம்ஸ் பாண்ட் பட ட்ரெய்லர் (விடியோ)

யூட்யூப்பில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நம்பர் 1 விடியோ நோ டைம் டு டை படத்தின் ட்ரெய்லர்தான்.

News image
Updated On :5 டிசம்பர் 2019, 4:48 pm IST

யூட்யூப்பில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நம்பர் 1 விடியோ நோ டைம் டு டை படத்தின் ட்ரெய்லர்தான்.

டேனியல் கிரைக், ரமி மாலக், லஷானா லின்ச் நடிப்பில் கேரி ஜோஜி ஃபுகுனகா இயக்கியுள்ள படம் இது.

ஜேம்ஸ் பாண்ட் படக் கதாநாயகனாக டேனியல் கிரைக் நடிக்கும் கடைசிப் படம் என்பதால் இப்படத்துக்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வரும் 25-வது என்பதும் குறிப்பிடத்தக்கது.  டேனியல் கிரைக் ஜேம்ஸ் பாண்டாக கலக்கும் முந்தைய படங்களின் ட்ரெய்லர் தொகுப்பு இதோ :

அடுத்த வருடம் ஏப்ரல் 3 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்தப் படத்துக்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தீவிர விசிறியான ரசிகர் கால்வின் டைசன் என்பவர் யூட்யூபில் தனது கருத்துக்களை வெளியிட்டு படத்தை பாராட்டித் தள்ளியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, ‘ஒவ்வொரு காட்சியும் அசத்தலாக உள்ளது. அச்சு அசலாக ஒரு பாண்ட் படத்தை பார்ப்பது பரவசத்துக்குள்ளாக்குகிறது. மேலும் இதில் பாண்ட் சண்டைக் காட்சிகள் பிரமாதம். வில்லனாக வரும் ராமி மாலிக்கின் தோற்றம், நடை உடை பாவனை அட்டகாசம்.

கதை என்னவாக இருக்கும் என்பது ஆவலைத் தூண்டுகிறது. இந்தப் படத்தில் பாண்ட் காதலி மேண்டலுடன் சந்தோஷமான வாழ்க்கையை துவக்கவிருக்கிறார் என்று தெரிகிறது. உடைந்த மாஸ்கை காண்பிக்கிறார்கள், நிச்சயம் பழைய வாழ்க்கை பற்றியதாக அது இருக்கும். கடைசிக் காட்சிகள் திக்குமுக்காட வைக்கின்றன. aston martin db5 காரை நுட்பமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  லஷானா லின்ச்சின் கதாபாத்திரமும் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 2.45 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த ட்ரெய்லரின் முதல் பாதி அருமை என்றால் அடுத்த பாதியைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆசம். ஏப்ரல் 2, 2020 வரை காத்திருக்க வேண்டுமே... உண்மையில் இந்த ட்ரெய்லர் பாண்ட் ரசிகர்களுக்கு முக்கியமாக எனக்கு இன்ப அதிர்ச்சி’ என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ள ட்ரெய்லர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.