சமகால அரசியலை பிளந்து கட்டியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் 'எல்.கே.ஜி' ட்ரைலர்
நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி முதன்முறை கதாநாயகனாக நடித்துள்ள 'எல்.கே.ஜி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.


சென்னை: நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி முதன்முறை கதாநாயகனாக நடித்துள்ள 'எல்.கே.ஜி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி வேடங்கள் மற்றும் ஓரிரண்டு படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் எல்.கே.ஜி.
புதிய இயக்குனரான கே.ஆர். பிரபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த், ஜே.கே. ரித்தீஷ், மயில்சாமி மற்றும் சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முன்னாள் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆற்றில் தெர்மக்கோல் விடுவது துவங்கி காலி நாற்காலிகளுடன் அரசியல் கூட்டம் என பல்வேறு சமகால அரசியல் சம்பவங்களை நையாண்டியாக பதிவு செய்துள்ள இப்படத்தில் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...