சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

இளையராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குநர் பார்த்திபனால் சாத்தியமானது: விஷால்

இதுபோன்று வேறு எங்கும், கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் கூட நடக்காது. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதைப் பார்க்க...

News image
Updated On :5 பிப்ரவரி 2019, 7:11 am

எழில்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய 'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமையன்று தொடங்கிவைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், 'இளையராஜா -75' என்ற விழா மலர் வெளியிடப்பட்டது. ரஜினி, கமல், ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பால்கி உள்ளிட்ட பிரபலங்களும் திரையுலகினரும் ராஜா ரசிகர்களும் பெரும்திரளாக இந்த இருநாள் விழாவில் கலந்துகொண்டார்கள். 

இந்நிலையில், தமிழக முதல்வரை நடிகரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இளையராஜா 75 பாராட்டு விழாவுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். இளையராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்வு இயக்குநர் பார்த்திபனால் சாத்தியமானது. விழாவில் ஒரே மேடையில் இளையராஜா பாட, ரஹ்மான் இசையமைக்க... இதுபோன்று வேறு எங்கும், கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் கூட நடக்காது. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதைப் பார்க்கமுடியாது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில் ராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் தோன்றினால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்து செய்த விஷயம் இது. பாராட்டு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கினோம். நடிகர், நடிகைகள் பலர் வரவில்லை.  

மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் சட்டவிரோதமான இணையத்தளங்களை முடக்கமுடியும். தமிழக அரசு நினைத்தால் திருட்டு விசியை ஒழிக்கமுடியும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.