காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

90 ML ட்ரைலர் சர்ச்சை: நடிகை ஓவியா 'கூல்' பதில் 

தான் நடித்துள்ள 90 ML பட ட்ரைலருக்கு சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.

News image
Updated On :11 பிப்ரவரி 2019, 6:25 am

DIN

சென்னை: தான் நடித்துள்ள 90 ML பட ட்ரைலருக்கு சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.

களவாணி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகியவர் ஓவியா. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகளவில் தோன்றினார்கள். 'ஓவியா ஆர்மி' உருவாகும் அளவிற்கு பிரலமாகிய ஓவியா நான்கைந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அவற்றில் 90 ML படமும் ஒன்று. அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்தப் படத்தில்  இரட்டை அர்த்த வசனங்களைக் அதிகம் இருந்ததால் தணிக்கையில் "ஏ" சான்றிதழ் பெற்றுள்ளது. அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார்.

ஹீரோயினை மையப்படுத்தி எடுத்த படம் என்பதால் 90 ML படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார் ஓவியா. அந்த படத்தின் ட்ரைலர் வெள்ளியன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.  

ஆனால் ட்ரைலரில் முகம் சுளிக்கும்படியான காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதை அடுத்து, பெண்ணியவாதிகள் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் 90 ML பட ட்ரைலருக்கு சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

'பழத்தைச் சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரைலரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.