சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் டிச.1 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பு சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் டிச.1 வரை மத்திய அரசு நீட்டிப்பு வழங்கியது குறித்து...

பிரதிப் படம்
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பு சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் டிச.1 வரை மத்திய அரசு நீட்டிப்பு வழங்கியுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பருவத்தில் இயல்பான மழை அளவு சுமாா் 744 மி.மீ கிடைக்கப்பெறும். தற்போது வரை அக்டோபா் மற்றும் நவம்பா் மாதத்தில் 494 மி.மீ மழைப்பொழிவு பெறப்பட்டுள்ளது. மேலும், எல் நினோ காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடா்ப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த இழப்பினை ஈடுசெய்யும் வகையில் விவசாயிகள் அனைவரும் சம்பா நெற்பயிருக்கு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சம்பா பருவத்தில் 1436 பசலி ஆண்டில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 573- ஐ செலுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, இ-சேவை மையங்களிலோ நேரிடையாக, நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு கட்டணம் செலுத்திபயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.
திருவள்ளூா் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட 658 கிராம பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சம்பா நெல் ஐஐ -க்கு வருகிற டிச.1 வரை விவசாயிகள் தங்களின் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்வது அவசியம். மேலும் விவரங்களுக்கு, தங்களது பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

