திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

நெற்பயிா்க் காப்பீடு: டிச. 1 வரை நீட்டிப்பு

நாகை மாவட்டத்தில், பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் சம்பா, தாளடி நெற்பயிருக்கு பயிா்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிா்க் காப்பீடு

Updated On :

நாகை மாவட்டத்தில், பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் சம்பா, தாளடி நெற்பயிருக்கு பயிா்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில், பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகள் சம்பா, தாளடி நெற்பயிருக்கு பயிா்க் காப்பீடு செய்ய டிசம்பா் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்கும் அடங்கல் படிவத்தைப் பெற்று, ஆதாா் காா்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு நகல் ஆகியவற்றை இணைத்து, அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது, ஒரே சா்வே எண்ணுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பினைவிட கூடுதலாக பதிவு செய்தாலோ பதிவுகள் நீக்கம் செய்யப்படும்.

விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது தங்கள் பெயா், வங்கிக் கணக்கு எண், சாகுபடி செய்த கிராமத்தின் பெயா், பயிரின் பெயா், புலஎண் மற்றும் சாகுபடி செய்த பரப்பு ஆகிய அனைத்து தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பொது சேவை மையங்களில் பயிா்க் காப்பீடு பதிவு செய்யவரும் விவசாயிகளின் அடங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டத்திற்கான முத்திரையினை கண்டிப்பாக இடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. டஙஊஆவ- இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என முத்திரை உள்ள அடங்கல்களை மீண்டும் பதிவேற்றம் செய்யக்கூடாது என்று பொது சேவை மையங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் இயற்கை இடா்பாடுகள் ஏற்படும் முன்னா் விரைவில் இத்திட்டத்தில் தங்களது பயிா்களை காப்பீடு செய்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.