ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக நடித்தவர் அகால மரணம்!

இருபது ஆண்டுகளுக்கு முன் ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்தவர் மகேஷ் ஆனந்த்
ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக நடித்தவர் அகால மரணம்!
Published on
Updated on
1 min read

இருபது ஆண்டுகளுக்கு முன் ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்தவர் மகேஷ் ஆனந்த் (57). அவரது வீட்டில் பணி புரியும் பெண் கடந்த சனிக்கிழமை காலை வீட்டின் கதவை தட்டிய போது உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்த கதவு திறக்கப்படவில்லை. சந்தேகத்துக்கு இடமாக இருக்கவே, அவர் உடனடியாகப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து பார்த்ததில் நடிகர் மகேஷின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. மகேஷின் உடலை கூப்பர் மருத்துவமனைக்கு போஸ்ட் மார்டம் செய்ய அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் மகேஷ் இயற்கை மரணம் அடைந்ததாக கூறினர்.

ஆனால் மரணம் அடையும் முன், அவர் தனிமையில் மது அருந்தியிருக்கிறார். மகேஷ் செலவுக்கு பணம் கஷ்டத்தில் பல ஆண்டுகள் இருந்துள்ளார். திரை உலகில் நடித்து வந்த போது கூலி நம்பர் 1, தனேதர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், சஞ்சய் தத், கோவிந்தா உள்ளிட்டோரின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வீரா படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடித்த ரங்கீலா ராஜா படம் கடந்த மாதம் 18-ம் தேதி ரிலீஸானது. பல ஆண்டுகள் கழித்து படத்தில் நடித்ததை அவர் மகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் படத்தில் ஆறு நிமிடம்தான் தோன்றுவேன். ஆனால் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்ததும், சொந்த வாழ்க்கைப் பிரச்னையினாலும் அவர் குடிப்பழக்கத்துக்கு உள்ளாகியிருந்தார். அதுவே அவரது மரணத்துக்கும் காரணமாகிவிட்டது என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டத்தினர்.

மகேஷ் ஆனந்தின் மனைவி உஷா பசானி மாஸ்கோவில் வசிக்கிறார். 2000-ம் ஆண்டு நடந்த திருமணம் இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. மகேஷ் மும்பை அந்தேரி பகுதியில் தனியாக வசித்து வந்தார். உஷா பசானிக்கு மகேஷின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com