

மார்ச் மாதத்தின் தொடக்க நாளன்று 8 தமிழ்ப் படங்கள் வெளிவரத் தயாராகியுள்ளன.
அருண் விஜய் நடித்த தடம், ஓவியா நடித்த 90 எம்எல், சேரன் இயக்கியுள்ள திருமணம், சாரு ஹாசன் நடித்துள்ள தாதா87, விளம்பரம், மானசி, பிரிவதில்லை, அடடே என 8 தமிழ்ப் படங்கள் மார்ச் 1 அன்று வெளிவரவுள்ளன.
இந்த 8 படங்களில் முதல் நாளன்று ஓவியா நடித்த 90 எம். எல். படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்.எல். படம் இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டுள்ளதால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இசை - சிம்பு. இயக்குநர் அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பிறகு ஓவியா நடித்து வெளியாகும் படம் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற காரணங்களால் இப்படத்துக்கு அதிகக் கவனம் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.