பிரபல பாலிவுட் நடிகரின் தந்தையான நடிகருக்கு புற்றுநோய் 

பிரபல பாலிவுட் நடிகரின் தந்தையான நடிகருக்கு புற்றுநோய் 

பழம் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான ராகேஷ் ரோஷன் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
Published on

மும்பை: பழம் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான ராகேஷ் ரோஷன் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பழம் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் நடிகருமான ராகேஷ் ரோஷன் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை , அவரது மகனும் பிரபல பாலிவுட் ஹீரோவுமான ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சில வாரங்களுக்கு முன்னால் என்னுடைய தந்தை தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற அன்றும்கூட, அவர் ஜிம் செல்லத் தவறவில்லை. புற்றுநோய்க்கு எதிராக முழு மனதுடன் போராடி வருகிறார். குடும்பத்தில் இப்படிப்பட்ட ஆளுமையைப் பெறுவதற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். 

அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று இன்று காலை கேட்டேன். அந்த புகைப்படம்தான் இது. 

இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com