நெடுவாழிக்கு கல்யாணமாமே!

ஒஸ்தியில் ரிச்சாவின் தந்தையாக வரும் வி டி வி கணேஷ் அவரை நெடுவாழி என்று தான் அழைப்பார்.
நெடுவாழிக்கு கல்யாணமாமே!
Updated on
2 min read

நடிகை ரிச்சா கங்கோபாத்யாயாவை நினைவிருக்கிறதா? தனுஷின் மயக்கம் என்ன? திரைப்படத்திலும், சிம்புவின் ஒஸ்தி திரைப்படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். பிறகு அவரைத் தமிழில் காணமுடியவில்லை. ஆனால் தெலுங்கில் பிரபாஸுடன் மிர்ச்சி திரைப்படத்தில் இரண்டு நாயகியருள் ஒருவராக நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தின் பின் அதில் ஹிட் அடித்த பாபி கேர்ள் பாடலுக்காக அக்கடபூமியின் ரசிகர்கள் ரிச்சாவின் பின் ஓ மை பாபி கேர்ள் தேன் குடித்த கரடிகளைப் போலமயங்கிப் போய் சுற்றிக் கொண்டிருந்தனர். ரிச்சா முதலில் அறிமுகமானது தெலுங்கில் தான். ராணா டகுபதியின் அறிமுகப் படமான லீடர் திரைப்படத்தில் நாயகியாக ரிச்சா அறிமுகமானார். தமிழ், தெலுங்கு என அவரது கேரியர் சுமுகமாகவே சென்று கொண்டிருந்த போது திடீரென நடிப்பை உதறிவிட்டு லண்டன் ஓலின் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ் பள்ளியில் எம் பி ஏ படிக்கப் போய்விட்டார். 2017 ஆம் ஆண்டு படிப்பை முடித்து விட்ட்டு பட்டம் வாங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அப்போது தான் ரிச்சாவின் ரசிகர்களுக்கு தாங்கள் எவ்வளவு தூரம் நெடுவாழியை மிஸ் பண்ணியிருக்கிறோம் என்பது புரிந்தது. ஓ மை பாபி கேர்ள்... நீ மீண்டும் வருவாயா? என டோலிவுட் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் நடிப்பில் ஆர்வமில்லை என அவர்களது எதிர்பார்ப்பை புஷ் ஆக்கினார்.

இப்போது அதற்கென்ன என்கிறீர்களா?

ஒன்றுமில்லை... பாபி கேர்ளுக்கு கல்யாணமாம்.

லண்டனில் எம் பி ஏ படிக்கச் சென்றார் இல்லையா? உடன் படித்த நண்பர் ஜோ லிகல்லாவுடன் நட்புறவுடன் இருந்திருக்கிறார். அந்த நட்பு காதலாகி இரண்டு வருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து பார்த்து விட்டு இருவருக்கும் வாழ்நாள் முழுதும் சேர்ந்து வாழும் அளவுக்கு சகிப்புத் தன்மையும் காதலும் இருக்கிறது என்பதைத் தீர்மானித்துக் கொண்ட பின் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம் தற்போது. இந்த சுபச்செய்தியை தனது டிவிட்டர் தளத்தில் ரிச்சா வெளியிட்டுள்ளார்.

இனி ரிச்சாவின் ரசிகர்கள் எப்போதும் போல ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அவரை வாழ்த்தி விட்டு ஓ மை பாபி கேர்ள்... நெடுவாழி என்று புன்னகைத்துக் கொள்ள வேண்டியது தான். வேறென்ன?!

அதெல்லாம் சரி அதென்ன நெடுவாழி என்று புருவம் உயர்த்துவோருக்கு...

ஒஸ்தியில் ரிச்சாவின் தந்தையாக வரும் வி டி வி கணேஷ் அவரை நெடுவாழி என்று தான் அழைப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com