

விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் இன்னும் பெயரிடப்படாத விஜய் 63 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க `பரியேறும் பெருமாள்' படத்தின் நாயகன் கதிர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
தற்போது நடிகர் கதிர் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இக்கதையைச் சொன்னதுமே, கதிர் நடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார். 'விஜய் அண்ணாவுடன் நடிப்பது என் நெடுநாள் ஆசை. அது நிறைவேறப் போகிறது. இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்? என்று தனது டிவிட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Officially IN
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.