அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அஜித்துக்கு ஜோடியாக தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார் வித்யா பாலன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம்...

News image
Updated On :28 ஜனவரி 2019, 7:01 am

எழில்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். கடந்த மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு பற்றிய தகவல் அதிகாரபூர்வமாகத் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2019 கோடைக் காலத்தில் அஜித் 59 படம் வெளியாகும். அஜித்தின் 60-வது படம் இந்த வருடம் ஜூலையில் ஆரம்பமாகும். அந்தப் படம் 2020 ஏப்ரலில் வெளியாகும். போனி கபூர் இவ்விரு படங்களையும் தயாரிக்கிறார். அஜித் 59-வது படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என அதிகாரபூர்வத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.