சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

‘பொன்னியன் செல்வன்’ கதையை இணையத் தொடராகத் தயாரிக்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்!

எம்எக்ஸ் பிளேயர், செளந்தர்யாவின் மே6 எண்டர்டெயிண்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பொன்னியின் செல்வனை...

News image
Updated On :30 ஜனவரி 2019, 12:09 pm

எழில்

கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியன் செல்வனை இணையத் தொடராகத் தயாரிக்கிறார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்எக்ஸ் பிளேயர், செளந்தர்யாவின் மே6 எண்டர்டெயிண்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பொன்னியின் செல்வனைச் சின்னத் திரையில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. எம்எக்ஸ் பிளேயர் செயலியில் வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரை சூர்யபிரதாப் இயக்கவுள்ளார். 

பொன்னியின் செல்வனைப் படித்த நாள் முதல் அதைத் திரையில் கொண்டுவரவேண்டும் என முடிவெடுத்தேன்.  சூர்யபிரதாப் இயக்குவதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் செளந்தர்யா. இணையத் தொடர் பற்றிய விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.