சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

வெளிமாநில கதாநாயகிகளுக்கு என்ன திறமை உள்ளது?: கேள்வி எழுப்பும் நடிகை ஸ்ரீ பிரியங்கா

இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்துத்தான் கிடைத்தது. ஆனால் எனக்கு...

News image
Updated On :31 ஜனவரி 2019, 9:37 am

எழில்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகும் படம் - மிக மிக அவசரம். பெண் காவலர் கதாபாத்திரத்தில் ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளார். அரீஷ் குமார், சீமான் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - இஷான் தேவ்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ஸ்ரீ பிரியங்கா பேசியதாவது:

நிறைய போராட்டங்களுக்குப் பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக, பெண் சிங்கமாக இன்று நான் நிற்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும். 

எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என என்னிடம் கேட்கிறார்கள். இங்கே நிறைய பேருக்கு நான் கதாநாயகியாக ஒரு முழுநீளப் படத்தையும் தாங்கிப் பிடிப்பேனா என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் என்னால் முடியும். தமிழ்ப் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்தப் படம் சொல்லும்.  

இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்துத்தான் கிடைத்தது. ஆனால் எனக்குக் குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் கதாநாயகிகளுக்கு என்ன திறமை உள்ளது எனத் தெரியவில்லை. அவர்களுக்குத் திறமை உள்ளது என நம்பிக்கை வைத்து ஒரு கதாபாத்திரம் அளிக்கும்போது ஏன் எங்களுக்கும் தரக்கூடாது?  தமிழ்ப்பெண்களாலும் ஒரு பெரிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கமுடியும் என்பதை இங்குள்ள இயக்குநர்கள் தான் நம்பவேண்டும். அப்போதுதான் எங்களாலும் மேலே வரமுடியும் என்று கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.