தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணியை எதிர்த்து  பாக்யராஜ் போட்டி 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர், நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணியை எதிர்த்து  பாக்யராஜ் போட்டி 

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர், நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நாசர் தலைமையிலான அணியின் நிர்வாகக் காலம் முடிவடைந்ததையடுத்து, 2019 -2022 ஆண்டுகளுக்கான நிர்வாக குழுவைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ளது. 

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மேலும், ஜூன் 14-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தேர்தல், சென்னை அடையாறு ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடவுள்ளது. இதற்கான 26 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் துணைத் தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன், கருணாஸும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடவுள்ளார்கள்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, குட்டி பத்மினி, கோவை சரளா, மனோபாலா, குஷ்பு, லதா உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள்.  

இந்நிலையில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர், நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை அவர் வெள்ளியன்று மாலை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.  பாக்யராஜ், ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து ஓர் அணியாக இந்த தேர்தலைச் சந்திக்கவுள்ளனர் என்று திரையுலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தவிர இன்னும் சிலரும் சுயேச்சையாக இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com