உதவி இயக்குநர் ஆனார் கபில் தேவின் மகள்!
இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார் கபிலின் மகள் அமியா தேவ்...


முன்னாள் வீரர் கபில் தேவின் மகள், திரையுலகில் நுழைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்ற நிகழ்வு, ஹிந்திப் படமாக உருவாகவுள்ளது. 83 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார் கபிலின் மகள் அமியா தேவ். 83 படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். 83 படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்படவுள்ளதாக ஜீவா சமீபத்தில் தெரிவித்தார்.
ரன்வீர் சிங், பங்கஜ் திரிபாதி, தஹிர் ராஜ் உள்ளிட்ட வீரர்கள் தற்போது இப்படத்துக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
83 படம் 2020-ம் வருடம் ஏப்ரல் 10 அன்று வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...