புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தாங்க முடியலடா சாமி: 'சூப்பர் டீலக்ஸ்'  படத்தை கலாய்த்த ஹீரோ 

'தாங்க முடியலடா சாமி' என்று சமீபத்தில் வெளியாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்'  படத்தை தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :31 மார்ச் 2019, 7:23 am

சென்னை: 'தாங்க முடியலடா சாமி' என்று சமீபத்தில் வெளியாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்'  படத்தை தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் விமர்சித்துள்ளார். 

இந்தியில் 'ப்ளாக் ப்ரைடே', 'ஜப் வீ மெட்', 'கோல்மால் ரிட்டன்ஸ்', 'ஹாலிடே', 'புலி' மற்றும் தனுஷ் நாயகனாக அறிமுகமான 'ராஞ்சனா'  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் நட்ராஜ்.

தமிழில் 2006-இல் வெளியான 'நாளை' என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமானார். பின்னர்  'சதுரங்க வேட்டை', 'மிளகா', 'முத்துக்கு முத்தாக',  'என்கிட்ட மோதாதே', 'போங்கு', 'ரிச்சி' உள்ளிட்ட சில படங்களிலும் நாயகனாகவும் நடித்துள்ளார்.

Story image

'ஆரண்ய கான்டம்' படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'.

விமர்சன ரீதியாக பலராலும் பாராட்டப்பட்டு வரும் இந்த படம் குறித்து விமர்சனங்களும் வெளிவருகின்றன.

இந்நிலையில் 'தாங்க முடியலடா சாமி' என்று சமீபத்தில் வெளியாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்'  படத்தை நட்ராஜ் விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

'சூப்பர் டீலக்ஸ்' தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்சனை ... அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.