நாங்களும் செய்வோம்லே! நடிகர் சூர்யா ரசிகர்களின் ஆவேசம்! 

நடிகர்களும் கட் அவுட்டும் என்று ஒரு கட்டுரை எழுதலாம் என்ற அளவுக்கு கட் அவுட் பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றி வருபவர்கள் தமிழ்த் திரை ரசிகர்கள்.
நாங்களும் செய்வோம்லே! நடிகர் சூர்யா ரசிகர்களின் ஆவேசம்! 
Published on
Updated on
2 min read

நடிகர்களும் கட் அவுட்டும் என்று ஒரு கட்டுரை எழுதலாம் என்ற அளவுக்கு கட் அவுட் பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றி வருபவர்கள் தமிழ்த் திரை ரசிகர்கள். ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் என தங்களுடைய ஆதர்சமான நடிகர்களுக்கு அவரவர் ரசிகர்கள் பிரமாண்டமான கட் அவுட்டுக்களை வைத்து மகிழ்வார்கள்.

அண்மையில் வெளியான பேட்ட படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், கடந்த ஆண்டு வெளியான சர்கார் படத்துக்காக நடிகர் விஜய்க்கும், பொங்கல் ரிலீஸாக வசூல் கட்டிய விஸ்வாசம் பட வெளியீட்டின் போது அஜித்துக்கும், தமிழகத்தில் அவர்தகளின் ரசிகர்கள் மிகப் பிரம்மாண்டமான கட்அவுட்கள் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சற்று மந்தமாக இருந்த கட் அவுட் கலாச்சாரம் இதற்குப் பிறகு மீண்டு மறுபடியும் தீவிரமடைந்தது. 

பிற நடிகர்களின் கட் அவுட்டுகளைப் பார்த்த சிம்பு, இதனை விமர்சிக்கும் வகையில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் தனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என்று தனது ரசிகரளிடம் வேண்டுகோள் விடுத்து ஒரு விடியோவை வெளியிட்டார். ஆனால் சமூக வலைத்தளங்களில் அவரை பலர் கலாய்க்கவே, கடுப்பான சிம்பு தனக்கு பிரம்மாண்டமான கட் அவுட்டை வைத்து அனைவரையும் பிரம்மிக்க வைக்கும்படி ரசிர்களிடம் மறுபடியும் ஒரு விடியோவை வெளியிட்டு கேட்டுக் கொண்டார். 

இந்நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களும் இந்த கட் அவுட் களத்தில் அதிரடியாக இறங்கியுள்ளனர். கட் அவுட் பாரம்பரியத்தில் இதுவரை வெளியான எல்லா சாதனைகளையும் முறியடிக்க முடிவு செய்துள்ளனராம். இந்தியாவில் இதுவரை எந்த நடிகருக்கும் வைக்கப்பட்டத அளவிற்கு கிட்டத்தட்ட 200 அடிக்கு மேல் உயரமுள்ள மெகா கட் அவுட் ஒன்றினை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் NGK ரிலீசாகும் சமயத்தில் இந்த கட் அவுட்டை லான்ச் செய்ய முடிவு எடுத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.

தற்போது சுதா கொங்குரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்றுதும்’ என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com