சென்னை: பிரபல நடிகர் துல்கர் சல்மான் தயாரிக்கும் மலையாளப் படத்தில் துணைஇயக்குநராக தனுஷின் கதாநாயகி ஒருவர் பணியாற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் மெகா ஹிட்டான 'பிரேமம்' படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஷ்வரன். அதன்பின் ஒன்றிரண்டு மலையாள படங்கள், தெலுங்கு படங்களில் நடித்த பின்னர் அவர் தமிழில் 'கொடி' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் தயாரிக்கும் மலையாளப் படத்தில் துணை இயக்குநராக அனுபமா பரமேஷ்வரன் பணியாற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானின் முதல் சொந்தத் தயாரிப்பான பெயரிடப்படாத படம் ஒன்றில் அனுபமா கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேநேரத்தில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் உதவி இயக்குனராகவும் அனுபமா பணியாற்றி வருகிறார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-
துல்கரின் முதல் தயாரிப்பான இப்படத்தில் திறமை வாய்ந்த இயக்குநர் ஷம்சு சாய்பா இயக்கத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் தகவலை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தப் படக்குழுவை நான் மிகவும் நேசிக்கிறேன். ஒரு படத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு அங்குலமாக கூட இருந்து தரிசிப்பது எனக்குப் புது அனுபவமாக இருக்கிறது.
படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்களை உங்களக்கு அப்டேட் செய்கிறேன். அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்
பாஜக ஆட்சியில் கேரளம் புதிய உச்சங்களைத் தொடும்: பிரதமர் மோடி உறுதி

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


