அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ரசிகர்கள் அளித்த அங்கீகாரம்: கதாநாயகி, பாடல்கள் இல்லாத கைதி படத்துக்கு 8 நாள்களில் ரூ. 50 கோடி வசூல்!

பிகில் படத்துக்குப் போட்டியாக தீபாவளி சமயத்தில் வெளியான கைதி படம் முதல் 8 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2019, 5:31 am

எழில்

பிகில் படத்துக்குப் போட்டியாக தீபாவளி சமயத்தில் வெளியான கைதி படம் முதல் 8 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கியுள்ளார். இசை - சாம் சிஎஸ். இந்தப் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான கைதி படம் முதல் 8 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. பாடல்களும் இல்லாமல் கதாநாயகி என்கிற கதாபாத்திரமும் இல்லாமல் எனவே துளிக் காதல் காட்சிகளும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் முதல் 8 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் கார்த்தி ஆகியோரைப் போல இதர தமிழ்த் திரைக் கலைஞர்களும் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவேண்டும் என்கிற செய்தியை இந்த வசூல் நிலவரம் வழியாக உணர்த்தியுள்ளார்கள் தமிழ் ரசிகர்கள். அந்த விருப்பத்தை தமிழ் சினிமா நிறைவேற்றுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.