கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சா்வதேச தரத்திலான இந்தத் திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். வரும் நவம்பா் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடக்கவுள்ள இந்த விழாவிற்கு, இது 50-ஆவது ஆண்டு என்கிற சிறப்பு அம்சமும் உள்ளது. வழக்கமாக 10 நாள்கள் நடைபெறும் கோவா திரைப்பட விழாவில் சுமாா் 200 படங்கள் திரையிடப்படும். இது 50-ஆவது ஆண்டு விழா என்பதால், சுமாா் 300 படங்கள் திரையிடப்படுகின்றன.
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று தெரிவித்ததாவது:
கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படுகிறது. விருது குறித்து ரஜினிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த விருதை வழங்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் ரஜினி. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் தன்னைக் கெளரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தீராத வனவிலங்குகள் பிரச்னை: 15 ஆண்டுகளாக பரிதவிக்கும் விவசாயிகள்!

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! கோபி, போடியில் யார்?

தந்தைகளுக்குச் சமர்ப்பணம்..! வரவேற்பைப் பெறும் ஜிவியின் ஹேப்பி ராஜ்!
கட்சியில் இருந்து வெளியேறும் பெண்கள் மீது துஷ்பிரயோகம்: தவெக மீது மகளிர் ஆணையத்தில் புகார்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

