சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

மலையாளக் கரையோர நடிகை மஞ்சு வாரியர்

நடிகா் திலீப், மஞ்சுவாரியா் காதலித்துத் திருமணம் செய்தனா். இவா்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.

News image
Updated On :4 நவம்பர் 2019, 11:29 am

DIN

நடிகா் திலீப், மஞ்சுவாரியா் காதலித்துத் திருமணம் செய்தனா். இவா்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக திலீப், மஞ்சுவாரியா் முறைப்படி விவாகரத்து செய்தனா். அதுபோல் நடிகை காவ்யா மாதவன், நிஷால் சந்திரா என்பவரை மணந்தார். இவா்களும் ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனா்.

Story image

இந்நிலையில் திலீப், காவ்யா மாதவன் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். அவா்களுக்கு சென்ற வருடம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் முகத்தை கடந்த ஒரு வருடமாக வெளியே காட்டாமல் இருந்தனா்.

Story image

ஒரு வருடம் முடிந்த நிலையில் குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடினா். இதையடுத்து முதன்முறையாக குடும்பத்துடன் குழந்தையின் புகைப்படத்தை திலீப் இணையத்தில் பகிர்ந்தார்.

மலையாள நட்சத்திரமாக இருந்தாலும் நடிகா் திலீப் தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ராஜ்ஜியம்’ படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ‘காசி’, ‘என் மன வானில்’ படங்களில் நடிகை காவ்யா மாதவனும், முதன்முறையாக தமிழில் ‘அசுரன்’ படம் மூலம் மஞ்சு வாரியரும் நடித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.