மீண்டும் ஜூலி!

இதோ சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 1 புகழ் ட்ரிகர் சக்தி மற்றும் அவரது அப்பா பி வாசுவுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களிலும் ஜூலி பகிர்ந்தார். எப்படி தெரியுமா?
JULIE WITH SAKTHI AND P VASU
JULIE WITH SAKTHI AND P VASU
Published on
Updated on
2 min read

பிக்பாஸ் சீசன் 1 மூலமாக பிரபல்யம் தேடிக் கொண்டவர்களில் முக்கியமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் ‘சின்னம்மா’ சசிகலாவை மிக மட்டமாக விமரிசித்து இட்டுக்கட்டி பாட்டுப்பாடி வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்ட ஜூலி என்ற இளம்பெண் அந்தப்போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு அதில் கிடைத்த பிரபல்யத்தை மூலதனமாக வைத்துக் கொண்டு பிக்பாஸ் சீசன் 1 க்கு தேர்வானார். தேர்வு செய்தது குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி சேனல். அந்த ரியாலிட்டி ஷோவில் ஜூலி இருந்தவரை அவர் தான் தமிழகத்தில் பலரது வாய்க்கு அவலாக இருந்து வந்தார். இப்படியும் ஒரு சந்தர்ப்பவாதியா? என்று ஜூலி குறித்து பலரும் விமரிசித்தார்கள். ஆனாலும் சளைக்கவில்லை ஜீலி. அவர் பாட்டுக்கு பிக் பாஸ் சீசன் 1 ல் கிடைத்த எதிர்மறைப் புகழை வைத்துக் கொண்டு சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்தார். சின்னத்திரை மட்டுமல்ல வெளியிடங்களிலும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார் என்பது தனிக்கதை.

தவிர, பெரிய திரையிலும் அனிதா எம் பி பி எஸ், மீண்டும் அம்மன் என்று அகலக்கால் வைத்தார். அந்தத் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நடந்து வருவதாகத் தகவல். நடுவில் சில காலம் மக்கள் ஜூலியை மறந்திருந்தனர். ஜூலியும் மக்களை மறந்து அவருண்டு, அவர் வேலையுண்டு என்றிருந்தார். அப்படியே இருந்திருக்கலாம். சும்ம விடுமா கர்ம வினை?!

இதோ சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 1 புகழ் ட்ரிகர் சக்தி மற்றும் அவரது அப்பா பி வாசுவுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களிலும் ஜூலி பகிர்ந்தார். எப்படி தெரியுமா? என்னுடைய அண்ணன், அப்பா என்று உறவுமுறை குறிப்பிட்டு ஜூலி அந்த புகைப்படத்தைப் பகிர்ந்தாலும் பகிர்ந்தார் உடனே மீண்டும் கிளர்ந்து எழுந்து விட்டார்கள் நெட்டிஸன்கள். 

அப்போ சினேகன் அண்ணா கோவிச்சுக்க மாட்டாரா? 

நிகழ்ச்சி முடியும் வரைக்கும் அப்படி ஒன்னும் அந்நியோன்யமா பழகினாப்புல தெரியலயே, இப்ப என்ன அண்ணா, அப்பா?! என்று ஜூலியை கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ ஜூலி என்ற பெயரை இனி யார் நினைத்தாலும் மீடியா ஹிட் லிஸ்டில் இருந்து பிரித்து விடவே முடியாது. அத்தனை டார்லிங் ஆகிப் போனார் ஜூலி என்று தான் சொல்ல வேண்டும்.

சந்தடி சாக்கில் மீரா மிதுனை பிபி3 ஜூலி என்று கூட சொல்லிக் காட்டுகிறார்கள் என்பதாகக் கேள்வி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com