தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகனுக்கு ‘தல அஜித்’ எனப் பெயரிட்டு அதே பெயரில் பள்ளியில் சேர்த்த  தல ரசிகர்!

கனுக்கு தல அஜித் என்றும் மகளுக்கு அஜித்தா என்றும் பெயரிட்டதோடு, அதே பெயர்களில் பிறப்புச் சான்றிதழ்களை வாங்கி...

News image
Updated On :10 அக்டோபர் 2019, 10:32 am

எழில்

அஜித் மீது தீவிரமான பிரியம் கொண்ட ரசிகர்கள் ஏராளமானோர் உண்டு. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், பட வெளியீட்டுக்கு முன்பு பேட்டி கொடுக்காமல் இருந்தாலும் அஜித் படங்களுக்கு ஆரம்ப நாள்களின் வசூல் அமோகமாக இருக்கும். 

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் ஒருவர் தன் மகனுக்கு தல அஜித் என்றும் மகளுக்கு அஜித்தா என்றும் பெயரிட்டதோடு, அதே பெயர்களில் பிறப்புச் சான்றிதழ்களை வாங்கி, பள்ளியிலும் அதே பெயர்களில் சேர்த்துள்ளார். 

மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த மதுரை வீரனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகனுக்கு தல அஜித் என்று பெயர் வைத்தவர், மகளுக்கு அஜித்தா என பெயர் சூட்டியுள்ளார். இதே பெயர்களில் பிறப்புச் சான்றிதழ்களை வாங்கியதோடு பள்ளிக்கும் இதே பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார். பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆட்டை, பள்ளி அடையாள அட்டை என அனைத்திலும் தல அஜித், அஜித்தா என்றே பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்தச் செய்தி தற்போது வெளியாகியுள்ளதால் பலரும் தல அஜித் மாணவனின் பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டைப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.