அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சூப்பர் ஸ்டார் இயக்குநர்: அட்லியை மெச்சும் பிரபல பாலிவுட் இயக்குநர்

என்ன ஒரு கொண்டாட்டமான திருவிழா பிகில் படம்

News image
Updated On :30 அக்டோபர் 2019, 5:39 am

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது. தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. 

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், பிகில் படத்தைப் பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்ன ஒரு கொண்டாட்டமான திருவிழா பிகில் படம்! பரபரப்பும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கொண்ட படம். தளபதி விஜய் நல்ல ஃபார்மில் உள்ளார். அவருடன் இணைந்து விசில் அடிக்கத் தூண்டுகிறார். அவர் நடிப்பு அற்புதம். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளார் அட்லி. சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்று பாராட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.