ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பிகில் படத்தின் பாடல்கள் வரும் 19 அன்று வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் பிகில் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நேரலை தொலைக்காட்சி ஒளிபரப்பு இல்லாதது ஏன் என்கிற கேள்விக்கு படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: பாடல் வெளியீட்டு விழா எங்களுக்கு மிகவும் சிறப்பான நிகழ்வாகும். படக்குழுவினர் எல்லோரும் நிகழ்சிக்கு வருவதற்கு ஏற்றாற்போல வெளியீட்டுத் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார நாளில் நிகழ்ச்சி நடப்பதால், நேரலை ஒளிபரப்பு சாத்தியமில்லை. சன் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது டிஆர்பி ரேட்டிங்குகளில் சாதனை நிகழ்த்தப்படும் என்று கூறியுள்ளார்.
பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் அடுத்த ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு

மானாமதுரை வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்! மே 1-ல் ஆற்றில் அழகா் இறங்கும் வைபவம்

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை
கர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


