சில முக்கிய காட்சிகளை காட்டுக்குள் எடுத்தோம்!
'மாநகரம்' படத்துக்கு லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி வரும் படம் 'கைதி'. கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


'மாநகரம்' படத்துக்கு லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி வரும் படம் 'கைதி'. கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசும் போது,

எல்லா நடிகர்களுக்கும் பயிற்சி கொடுத்து நடிக்க வைக்கிறோம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, தொழில்நுட்ப குழுவுக்கும் ரிகர்சல் கொடுத்தோம். சில முக்கிய காட்சிகளை காட்டுக்குள் எடுத்தோம்.
ஐந்து நிமிட அளவுக்கான ஒரு விடியோவை எடுத்து, அதை எடிட் செய்து, அதற்குப் பின்னணி இசை சேர்த்து முழுமையான விடியோவாக தயார் செய்து பார்த்தோம். இதிலேயே நாம் எந்த மாதிரியான ஒரு படத்தில் வேலை பார்க்கப் போகிறோம் என்ற திட்டத்துக்கு வந்து விட்டோம்.
அது எனக்கு இந்தப் படத்துக்கு முழு வடிவம் கொடுக்க கை கொடுத்தது. அது பெரிதும் உதவியது. காட்டில் எடுத்த படம் என்பதால் அதிகமாக லைட்ஸைப் பயன்படுத்தாமல் சின்னச் சின்ன லைட்ஸை வைத்து எடுத்தோம். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் பெரும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு படத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம்’ என்றார் லோகேஷ் கனகராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...