/

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது  

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்
Updated On :31 ஜனவரி 2024, 10:11 am

DIN

புது தில்லி: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். இந்தியாவைத் தாண்டியும் இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக அறியப்படுபவர்.

இந்திய திரைத்துறையின் உச்சபட்சமான விருதாக கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாஹேப் பால்கே பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரைப்படத்துறையில் அமிதாப் செய்துள்ள வாழ்நாள் சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.