
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்துக்கு 'தர்பார்' என்று தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இப்படத்துக்கு தொடர்ச்சியாக தேதிகளை ஒதுக்கியுள்ளார் ரஜினி. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
ஏப்ரல் 10 மும்பையில் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில், படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் போலீஸ் கெட் அப்பில் நடிக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. இதற்கு முன்னர் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்த படங்கள் :
1980 - ராம் ராபர்ட் ரஹீம்
1980 - அன்புக்கு நான் அடிமை
1982 - மூன்று முகம்
1983 - கொடி பறக்குது
1991 - நாட்டுக்கு ஒரு நல்லவன்
1992 - பாண்டியன்
ரஜினியின் 167-வது படமான தர்பாரில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து, போலீஸ் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் 2020-ம் ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.