சிவகார்த்திகேயனை நான் அறிமுகப்படுத்த இருந்தேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்
சிவகார்த்திகேயனை நான் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த இருந்தேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் புகழ்பெற்று சினிமாவிலும் சாதித்து வருபவர் சிவகார்த்திகேயன்.
‘ரஜினி முருகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ பாடலில் தன்னைக் கேலி செய்வதாக சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருந்தார் நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன். ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் அவர் சொன்ன வார்த்தைகள் அவை.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை நான் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த இருந்தேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 2012-ல் குறள் 786 என்கிற படத்தின் இயக்குநராக அறிமுகமாக இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்தப் படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயனைத் தேர்வு செய்திருந்தார். எனினும் அந்தப் படத்துக்குப் பதிலாக ஆரோகணம் என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சிவகார்த்திகேயனும் மெரினா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ட்விட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:
சிவகார்த்திகேயனுடனான சண்டை முன்பு நடந்தவை. மறந்தே போச்சு. அவர் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. திறமையின் மூலமாக தற்போதைய இடத்தை அடைந்துள்ளார். என்னைப் பற்றி அறியாதவர் போல பேசியதால் எனக்குக் கோபம் வந்தது. குறள் 786 படத்துக்காக என்னுடன் 2 வருடங்கள் பயணித்தார். எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இருந்தார். குறள் 786 படத்தின் மூலமாக அவரை அறிமுகப்படுத்த இருந்தேன். அந்தப் படத்தைக் கைவிட்டதால் மெரினாவில் நடித்து அவர் அறிமுகமானார். என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...