மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்!
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த சனிக்கிழமை மாலை மூச்சுத்திணறலும் லேசான நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.
நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் உதவியால் ஓரிரு நாள்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் என்று தகவல் தெரிவித்தார் சஞ்சய் தத்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து தற்போது குணமடைந்த சஞ்சய் தத், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...