பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கட்டணம் ரூ 100: ஓடிடி தளத்தில் வெளியாகும் அண்டாவ காணோம் படம்

ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள அண்டாவ காணோம் படம் ஆகஸ்ட் 28-ல் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 6:35 am

ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள அண்டாவ காணோம் படம் ஆகஸ்ட் 28-ல் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

ஸ்ரேயா ரெட்டி நடித்த அண்டாவ காணோம் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. வேல்மதி இயக்கியுள்ள இந்தப் படம் நீண்ட நாளாக வெளிவராமல் இருந்த நிலையில் ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28 அன்று வெளியாகவுள்ளது.

இதுபற்றி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

கிட்டத்தட்ட வட்டி இல்லாமல் நான்கு கோடி ரூபாய் அசல் உள்ள இந்தப் படத்தை ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து நம்பிக்கையில் மீட்டெடுப்போம் என ஓடிடி தளத்தில் வெளியிடுகிறேன். இப்படத்தை ரூ. 100 மட்டும் செலுத்தி குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். மேலும் ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓடிடி தளத்தில் புதிய படங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.